இப்பூஉலகில் இறைவனின் பெயர் கொண்ட கிருஷ்ணன் வகை சமுதாயகர்களின் பூர்வீகம் அகண்ட பாரத தேசத்தின் இன்றைய குஜராத் மாநிலமாகும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ணணின் அரண்மனை நகரான துவாரகா புரியிலிந்து குடிபபயர்ந்த “விருஷ்ணி சத்திரியர்கள்” தெற்கு நோக்கி பயணித்து னவணாட்டின் தலைநகரான “அனந்த சயனம்” (இன்றைய திருவனத்தபுரம்) என்ற இடத்திற்கு வந்தனர். அவர்கள் துவாரகையிலிந்து “திரு ஆம்பாடி கிருஷ்ணன்” விக்ரகத்தை உடன் கொண்டு வந்தனர். அன்றைய திருவிதாங்கூர் மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா அந்த விக்ரகத்தை ஸ்ரீ பத்மநாப சேஷத்திரத்தின் வடமேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்து தனி சன்னதி அமைத்தனர். பார்த்த சாரதியாக அருள்பாலிக்கும் திரு ஆம்பாடி கிருஷ்ணணின் நித்திய பூஜைகளை கிருஷ்ணன் வகை சமுதாயதினர் செய்து வந்தனர். சத்திரிய வம்சத்தினரா தாலால் மன்னரின் படை வீரர்களுக்கு வாள் பயிற்சியும் அளித்தனர்.
காலச்சக்கரத்தின் மாற்றத்தால் அங்கிருந்து இடம் பபயர்ந்து தென் திருவிதாங்கூர் ( இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) வந்தனர். வந்து குடிபெயர்ந்த இடங்களில் எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி, உஜ்ஜயிேி மாகாளி அம்மன் சன்னதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர். நல்ல விவசாய அறிவும் கால்நடை பராமரிப்பும் கொண்ட நமது மூதாதையர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தரவாடுகறளயும், பிடாகைகளையும் அமைத்து சமுதாயமாக சேர்ந்து வாழ்ந்தனர். நல்ல தெய்வ பக்தியும், நாட்டுப்பற்றும், வீரமும், கல்வி அறிவும், நற்சிந்தனைகழும், கடின உழைப்பும் இயற்கையாகவே பெற்ற கிருஷ்ணன் வகை சமுதாயாக்கார்கள் வரும் காலங்களில் பல்வேறு வளங்களை பெற்று வாழ்வில் உயர்ந்து, பாரில் தலைசிறந்து விளங்க எல்லாம் வல்ல பரமாத்மவான ஸ்ரீ கிருஷ்ணன் அருள் பாலிக்கட்டும்.
Read More